Crime : இயக்குனர் என கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது மனைவியே கொடுத்த புகார்.. விசாரணையை தொடக்கிய போலீசார்
Crime : தன்னை திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா இவருக்கு வயது 41. இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 18ம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனக்கு ஏற்கனவே கோவையில் பெண் ஒருவருடன் திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டேன் என கூறி குடியாத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவர் என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்.
இதைத்தொடர்ந்து பெரியவர்கள் முன்னிலையில் கலசபாக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர் சினிமா டைரக்டர் என்றார். ஏற்கனவே சினிமா படம் தயாரித்து உள்ளதாகவும் கூறி என்னை நம்பவ வைத்து சென்னைக்கு அழைத்து சென்றார். நானும் நம்பி சென்றேன்.