தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : மக்களே உஷார்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.. எந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா!

Weather Update : மக்களே உஷார்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.. எந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 26, 2024 07:32 AM IST

Weather Update : கன மழை காரணமான நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர், தாலுகா பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.. எந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா!
மக்களே உஷார்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.. எந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா!

Weather Update : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமான நீலகிரி. மாவட்டம் பந்தலூர்,கூடலூர், தாலுகா பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த தினங்களுக்கான வானிலை நிலவரம்

27.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.06.2024 முதல் 01.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

25.06.2024 முதல் 29.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2 - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

25.06.2024 மற்றும் 26.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.06.2024 முதல் 29.06.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

25.06.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.06.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9