Weather Update : மக்களே எச்சரிக்கை.. இன்று 5 மாவட்டங்களில் மழை கொட்டும்.. மீனவர்களுக்கான வானிலை ஆய்வு மைய அறிவிப்பு இதோ!-weather update people alert rain will fall in 5 districts today meteorological center announcement for fishermen - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : மக்களே எச்சரிக்கை.. இன்று 5 மாவட்டங்களில் மழை கொட்டும்.. மீனவர்களுக்கான வானிலை ஆய்வு மைய அறிவிப்பு இதோ!

Weather Update : மக்களே எச்சரிக்கை.. இன்று 5 மாவட்டங்களில் மழை கொட்டும்.. மீனவர்களுக்கான வானிலை ஆய்வு மைய அறிவிப்பு இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 04, 2024 08:54 AM IST

Weather Update : தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மக்களே எச்சரிக்கை.. இன்று 5 மாவட்டங்களில் மழை கொட்டும்.. மீனவர்களுக்கான வானிலை ஆய்வு மைய அறிவிப்பு இதோ!
மக்களே எச்சரிக்கை.. இன்று 5 மாவட்டங்களில் மழை கொட்டும்.. மீனவர்களுக்கான வானிலை ஆய்வு மைய அறிவிப்பு இதோ!

மேலும் வலுவான தரை காற்று  30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். இதனால் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

அதே நேரம் சென்னையில் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தமிழகத்தில் பரவலாக ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் அதே சமயம் மழையின் அளவு படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

04.08.2024 முதல் 06.08.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

02.08.2024 முதல் 04.08.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.08.2024: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

04.08.2024: மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.08.2024 மற்றும் 06.08.2024: மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.