Weather Update: 12 மாவட்டங்ளுக்கு ஆரஞ்சு அலார்ட்.. வெளுத்து வாங்குமா ரெமல் புயல்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
Weather Update: இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Weather Update : தமிகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிர மடைந்துள்ளது. இந்நிலையல் அடுத்த ஒரு மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தை பொருத்தவரை வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் கடுமையாக தாக்கியது. பொதுவாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் வேலூரை விட ஈரோட்டில் அதிக வெயில் பதிவானது.
இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மிக கடுமையாக இருக்கும் என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால் மே மாதம் தொடங்கியதில் இருந்து வானிலை மாற துவங்கியது. தென் மாவட்டங்களில் தொடங்கிய மழை தற்போது வட மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்நிலையில், இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்க கடலில் வரும் நாளை (25 ஆம் தேதி) காலை புயலாக மாற வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மறுநாள் (மே 26 ஆம் தேதி) மாலைக்குள் தீவிரப்புயலாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த 'ரீமெல்' என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரள கடற்கரையையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10 மணி வரை மிதமான மழை
திருப்பர், கோவை , தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலார்ட்
இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
23.05.2024 முதல் 26.05.2024 வரை
23.05.2024 முதல் 26.05.2024 வரை
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
22.05.2024: அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறையக்கூடும்.
23.05.2024 & 24.05.2024: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
25.05.2024 & 26.05.2024:அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்