TN Weather Update: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 3 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட் இதோ..!
Weather Update: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 29) முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 3 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட் இதோ..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 29) முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் (மே 29, 30) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.05.2024 மற்றும் 01.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.