Weather Update: ’தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Weather Update: 30.06.2024 முதல் 04.07.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கோவையில் கனமழை எச்சரிக்கை விடுப்பு
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 30.06.2024 மற்றும் 01.07.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
30.06.2024 முதல் 04.07.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை மற்றும் புறநதர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திறகு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 செல்சியஸை ஒட்டியும் குறைந்த பட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேர நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னதுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஒட்டியும் குறைந்த பட்ச வெப்பநிலை 20-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
மேலும், இன்று இரவு 10 மணி வரை தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இரவு 9.30 மணிக்கு மேல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்