Weather Update: காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை! 10 மாவட்டங்களில் மழை இன்று பெய்யும்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
Weather Update: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 மாவட்டங்களில் இன்று (03.06.2024) காலை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறி உள்ள வானிலை ஆய்வு மையம், இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.
