தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: காற்றின் வேகதிசை மாறுபாடு! தமிழ்நாட்டில் மழை! 2 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இதோ!

Weather Update: காற்றின் வேகதிசை மாறுபாடு! தமிழ்நாட்டில் மழை! 2 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இதோ!

Kathiravan V HT Tamil
Jul 04, 2024 02:33 PM IST

Weather Update: நாளை முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Weather Update: காற்றின் வேகதிசை மாறுபாடு! தமிழ்நாட்டில் மழை! 2 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இதோ!
Weather Update: காற்றின் வேகதிசை மாறுபாடு! தமிழ்நாட்டில் மழை! 2 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இதோ!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.