ஷாக் வீடியோ! சரமாரியாக அடித்துக்கொண்ட தனியார் பேருந்து கண்டக்டர்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஷாக் வீடியோ! சரமாரியாக அடித்துக்கொண்ட தனியார் பேருந்து கண்டக்டர்கள்

ஷாக் வீடியோ! சரமாரியாக அடித்துக்கொண்ட தனியார் பேருந்து கண்டக்டர்கள்

Karthikeyan S HT Tamil
Dec 07, 2022 06:10 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரு தனியார் பேருந்து நடத்துனர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல்லில் சரமாரியாக அடித்துக்கொண்ட தனியார் பேருந்து கண்டக்டர்கள்.
திண்டுக்கல்லில் சரமாரியாக அடித்துக்கொண்ட தனியார் பேருந்து கண்டக்டர்கள்.

இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லக்கூடிய இரண்டு தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு இடையே வாகனத்தை இயக்குவதற்கான நேரம் இடைவெளி தொடர்பாக நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது. இதையடுத்து இரு நடத்துனர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் வைத்தே இரண்டு நடத்துனர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.