Vijays Visit to Kallakurichi: கள்ளக்குறிச்சி சோகம்.. தள்ளு முள்ளுக்கு இடையே நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijays Visit To Kallakurichi: கள்ளக்குறிச்சி சோகம்.. தள்ளு முள்ளுக்கு இடையே நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

Vijays Visit to Kallakurichi: கள்ளக்குறிச்சி சோகம்.. தள்ளு முள்ளுக்கு இடையே நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 20, 2024 07:09 PM IST

Vijays Visit to Kallakurichi: அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சோகம்.. தள்ளு முள்ளுக்கு இடையே நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!
கள்ளக்குறிச்சி சோகம்.. தள்ளு முள்ளுக்கு இடையே நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க சுடும் என்ற அச்சம் உள்ளது. இந்த சம்பவத்தால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களிடம் அவர்களது உடல் நிலை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

தொடர்ச்சியாக அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சிக்கு நேற்றில் வந்து ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில் விஜய் வந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.  

இந்நிலையில் கள்ளக்குறிச்சிக்கு சென்ற விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டிய விஜய்

இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 116 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றிரவு 16 ஆக இருந்த நிலையில், தற்போது 38 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.