Chennai Rains: ‘ஐய்யயோ! மறுபடியுமா? சென்னையில் இன்று இரவு முதல் மிக கனமழை எச்சரிக்கை!’
”இரவு முதல் நாளை வரை 150-250 மிமீ வரையிலான அதிதீவிர மழையும் பெய்யக்கூடும்”
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் இன்று இரவு முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மழை தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், கடந்த 4 ஆண்டுகளில் ஜனவரியில் பருவமழை பொழிவது சகஜமாகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்த மழை தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் இன்னும் 2-3 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அழகான மழையைக் கொண்டிருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு முதல் நாளை வரை 150-250 மிமீ வரையிலான அதிதீவிர மழையும் பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை, கடற்கரைக்கு அருகில் உள்ள மாவட்டங்கள், ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என கூறி உள்ள பிரதீப் ஜான், இது மிக்ஜாங் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பை போல் இருக்காது என தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்