Vengai Vayal Issue : வேங்கைவயல் விவகாரம் - சந்தேகிக்கப்படும் 11 நபர்களுக்கு இன்று டி.என்.ஏ பரிசோதனை!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கிடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது. விரைவில் அந்த ஆணையம் விசாரணை செய்யும் என்றும் அதற்கு தமிழக அரசு வேண்டிய ஏற்பாடுகளை ஆணையத்திற்கு செய்து கொடுக்கும் என்றும் சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறிய வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீர் தேக்க தொட்டி நீரை சோதனை செய்ய பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. நீரின் சோதனை முடிவில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்நிலையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்தம் எடுக்க புதுக்கோட்டை நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது. அதன்படி சந்தேகிக்கப்படும் 11 நபர்களுக்கு இன்று டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்தம் எடுக்க புதுக்கோட்டை நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்