தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Vadakalai Vs Thenkalai: Clash Between Vadakalai And Thenkalai Factions In Kanchipuram Over Prabandham Singing

Vadakalai Vs Thenkalai: ’மீண்டும் வெடித்த வடகலை-தென்கலை மோதல்’ அடித்து கொள்ளும் அர்ச்சகர்கள்! வைரல் வீடியோ!

Kathiravan V HT Tamil
Jan 18, 2024 08:20 AM IST

”தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது”

வடகலை தென்கலை பிரிவினைர் இடையே மோதல்
வடகலை தென்கலை பிரிவினைர் இடையே மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது. இங்குள்ள ’அனந்த சரஸ்’ எனும் குளத்தில் உள்ள ’அத்தி வரதர்’ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம் உலக அளவில் புகழ்பெற்றது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

மோதலில் முடிந்த வைகாசி பிரம்மோற்சவம்

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவவத்தின்போது மூன்றாம் நாள் இரவு நடந்த ஹனுமந்த வாகன உற்சவத்தின்போது வேதபாராயணம் செய்வதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. பெருமாளுக்கு படைக்கப்பட்ட தோசை, வடையை யாருக்கு தருவது என்பதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது.

நவம்பரில் வாக்குவாதம் 

கடந்த நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தேசிக சுவாமிகளுக்கு பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. 

வேதாந்த தேசிகர் சுவாமிகள் வீதியுலாவின்போது வரதராஜபெருமாள் கோயில் அருகே வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர். அப்போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பின்னர் இயல்புநிலை திரும்பியது. 

பார்வேட்டை உற்சவத்தில் மோதல் 

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெற்ற பார்வேட்டை உற்சவத்தின் போது பிரந்தம் பாடுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்