Villupuram: பட்டப்பகலில் அதிர வைத்த சம்பவம்; ஓட ஓட விரட்டி 2 ரவுடிகள் வெட்டிக் கொலை!
Villupuram Crime: விழுப்புரம் அருகே ரவுடிகள் இருவர் இன்று காலை மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த திருவக்கரை பகுதியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரவுடிகள் இருவர் இன்று காலை மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரி மாநிலம், பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண் (32), கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பரசன்(28). பிரபல ரவுடிகளான இருவரும் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று கையெழுத்திட்டு வந்தனர்.
இந்த நிலையில் வானூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக இருவரும் இன்று (ஜூன் 10) பிள்ளையார்குப்பத்தில் இருந்து காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லிங்கரெட்டிப்பாளையம் வழியாக தமிழகப் பகுதியான செங்கமேடு பகுதியில் இருவரும் சென்றுகொண்டிருந்த போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்து அவர்களது டூவிலர் மீது தங்களது பைக்குகளை மோதவிட்டனர்.
இதில் நிலைத்தடுமாறி சாலையோரத்தில் விழுந்த அன்பரசனை அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண் அங்கிருந்து தப்பியோடினர். சுமார் 1 கி.மீ. தொலைவு ஓடிய அருணை அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வானூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார், சடலங்களைக் கைப்பற்றினர் உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பட்டப்பகலில் இரண்டு ரவுடிகள் மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழிக்குப்பழி..
கடந்த 2020 ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் அருண், அன்பரசன் தொடர்புடையவர்கள் என்பதும், அந்த கொலையில் பழிக்குப்பழிவாங்கவே தற்போது கொலை நிகழ்ந்துள்ளது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்