TTV Dhinakaran: உதயநிதி அமைச்சராவதில் தவறில்லை! ஆனால் ஏன் அவசரம்? டிடிவி
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் அவசரம் காட்டுவது ஏன்? என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும். விடியல் ஆட்சி தருவதாக கூறிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சியாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது 60வது பிறந்தநாளை தஞ்சையில் வைத்து தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தீய சக்தி திமுகவை, எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வீழ்த்த வேண்டும் என்றால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பலமுறை நிருபித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். அவர் அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை ஆனால் அவசரம் காட்டுவது ஏன் என்பது தெரியவில்லை . இதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. விடியல் ஆட்சி வருவதாக சொல்லிவிட்டு விடியா மூஞ்சி ஆட்சியாக இருப்பதாக மக்கள் கொந்தளிப்பில்