Trichy murder:திருச்சியில் பயங்கரம்- பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Trichy Murder:திருச்சியில் பயங்கரம்- பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை!

Trichy murder:திருச்சியில் பயங்கரம்- பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை!

Divya Sekar HT Tamil
Dec 18, 2022 06:52 AM IST

திருச்சி மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மற்றும் அவரது அத்தை
தந்தை மற்றும் அவரது அத்தை

அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு,பராமரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது ஜீயபுரம் அருகே எலமனூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

ஆற்றங்கரையில் வீசிய குழந்தை

இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட தொடர் விசாரணையில், ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவியின் குழந்தை எனத் தெரியவந்தது. மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்துள்ளது.

ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலைவாணி உயிரிழந்தார். இது தொடர்பாக ஜீயபுரம் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த போது நீதிபதியிடம் அந்த மாணவி மரண வாக்குமூலம் அளித்தார்.

அதில் தான் தற்கொலைக்கு முயலவில்லை, தனது வாயில் விஷம் ஊற்றி தனது தந்தையும், அத்தையும் கொல்ல முயன்றனர் என வாக்கு மூலம் அளித்துள்ளார்.தனக்கு இறப்பு நேரிட்டால், அதற்கு காரணம் அவர்கள் தான் என்றும் கூறியிருக்கிறார்.

விஷம் கொடுத்து கொலை

இதனையடுத்து விசாரணையின் போலீசார், அந்த மாணவியின் தந்தை செல்வமணி (50) மற்றும் அவரது அத்தை மல்லிகாவிடம் ( 55) விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவி உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் எல்லை மீறியதால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்ததும், அது வெளியே தெரிந்ததால் பெயர்கெட்டுவிடும் என்ற ஆத்திரத்தில் தந்தை செல்வமணி மற்றும் அவரது அத்தை ஆகிய இருவரும் சேர்ந்து கலைவாணியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி குடிக்க வைத்ததால் கலைவாணி இறந்தது விசாரணையின் இறுதியில் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.