Kaveri River Bridge close: திருச்சி காவிரி பாலம் மூடல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kaveri River Bridge Close: திருச்சி காவிரி பாலம் மூடல்!

Kaveri River Bridge close: திருச்சி காவிரி பாலம் மூடல்!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 10, 2022 06:56 PM IST

பராமரிப்பு பணியின் காரணமாக இன்று நள்ளிரவு முதல் திருச்சி காவிரி பாலம் மூடப்படுகிறது.

<p>திருச்சி காவிரி பாலம்</p>
<p>திருச்சி காவிரி பாலம்</p>

தற்போது இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மூடப்பட உள்ளது. இதன் பராமரிப்பு பணிக்கு சராசரியாக 5 மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. 

மேலும் அதற்கான மாற்றுப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது காவிரி பாலத்திற்கு முன்னதாகவே உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடது புறம் திரும்பினால் சென்னை பைபாஸ் சாலை வரும்.

பின்னர் அந்த பைபாஸ் சாலையில் உள்ள பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணம் செல்லும் சாலை வழியாகச் சென்று அங்கே உள்ளே ரயில்வே மேம்பாலத்தை அடைந்தால் ஸ்ரீரங்கம் செல்ல முடியும்.

அதே வழியைப் பின்பற்றித் திரும்பச் சென்றால் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடையலாம். பொதுமக்களுக்கு இது அலைச்சலாக இருந்தாலும் பராமரிப்பு பணிகள் காரணமாக இதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனத் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.