Training For Women : பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி – விவரங்கள் உள்ளே…
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் எல்.இ.டி. பல்பு, சோலார் அகல் விளக்கு தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. வரும் வாரம் சென்னையில் நேரடி பயிற்சியாக திறன்மிக்க பயிற்சியாளர்களை கொண்டு எல்.இ.டி. பல்பு செய்முறை பயிற்சியும், அலங்கார விளக்கு, அகல் விளக்கு தயாரிக்கும் பயிற்சியும் நடத்த இருக்கிறது.
இந்த பயிற்சியில் அவர்களுக்கு மூலப்பொருட்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் கையாலேயே தயார்செய்ய கற்றுத்தரப்படும்.இந்த பயிற்சியின் மூலம் அவர்கள் உத்தரவாதத்துடன் கூடிய பல்பு மற்றும் அகல்விளக்கு தயார் செய்ய கற்றுக்கொள்ளலாம்.
மேலும் இந்த பயிற்சியின்போது அதில் உபயோகிக்கும் பொருட்களும், அவை எங்கு கிடைக்கும்? என்ற விவரங்களும், அந்த பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும்? என்ற விவரங்களும், மார்க்கெட்டிங் செய்யும் வகைகளும் நன்கு கற்றுத்தரப்படும்.
இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் இதை வீட்டில் இருந்தே தயார் செய்து உங்களுக்கு தெரிந்த இடங்களிலோ அல்லது கடைகளிலோ விற்பனை செய்து தொழிலை மேம்படுத்தலாம்.
ஒருநாள் நேரடி பயிற்சியாக, இந்த பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 9003189063, 965547039 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் சங்கத்தின் உறுப்பினராகி தங்களுடைய விவரங்களை பதிவுசெய்து சங்கத்தின் மூலமாக பயிற்சிகள் மற்றும் ஸ்டால்கள் போன்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், ஆண்ட்ராய்டு செல்போனில் www.form.wewatn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பெண்கள் தங்கள் தயாரிப்புகளையும், தாங்கள் வாங்கி விற்கும் பொருட்களையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு எந்தவித கட்டணமும் இன்றி சங்கத்தின் மூலமாக www.http:/rebrand.ly/Eshopee என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் படிக்கும் நேரத்திலேயே மகளிர் கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றில் கைத்தொழில் சிலவற்றை கற்றுக்கொடுத்து தொழில்முனைவை ஊக்குவிப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே, கல்லூரி, பள்ளிகள் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் மற்றும் தொழில்முனைவு கருத்தரங்குகள் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்