சென்னை, கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்து மாற்றம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னை, கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்து மாற்றம்!

சென்னை, கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்து மாற்றம்!

Karthikeyan S HT Tamil
Jul 22, 2022 08:51 PM IST

சென்னை, கோயம்பேடு முதல் வடபழனி வரை பயணிப்போர் நிச்சயம் இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

<p>கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்து மாற்றம்</p>
<p>கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்து மாற்றம்</p>

சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரை 100 அடி சாலையில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நாளை முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடபழனி 100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஜூலை 23ஆம் தேதி முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றத்தின் முழு விவரம்:

  • கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மையம் தடுப்பு சுவரால் மூடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தெற்காசிய விளையாட்டு நகரம் சந்திப்பு மற்றும் வடபழனி பாலத்தின் கீழ் ‘U’ திருப்பத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
  • விநாயகபுரம் சந்திப்பிற்கும், பெரியார் பாதை சந்திப்பிற்கும் இடையே புதிதாக அரும்பாக்கம் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 க்கு இடையில் உள்ள ‘U’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பெரியார்பாதைக்கும் நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண்கள் எண் 126 மற்றும் 127 க்கு இடையில் புதிய ‘U’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திருப்பம் செய்ய விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள ‘U’ திருப்பத்தில் திருப்பி செல்லலாம்.
  • வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார்பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ இரயில்நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பிக் கொள்ளலாம்.
  • விநாயகபுரம் சந்திப்பில் எம்எம்டிஏ காலனி வலதுபுறம் திரும்பி செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள விளையாட்டு கிராமம் ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
  • கோயம்பேடு திசையில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பைதாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம்.
  • பெரியார் சந்திப்பு மூடப்படுவதால் பெரியார்பாதை உள் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்லவும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார்பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் 240 மீட்டர் தொலைவில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
  • கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ்ரோடு பாலத்தின் கீழ் 199 மீட்டர் தூரம் சென்று ‘U’ திருப்பம் எடுத்து செல்லலாம்.
  • நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.

பொதுமக்கள் இது குறித்து ஆலோசனைகள் 044-23452362, 044-42042300 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.