சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை நடவடிக்கை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை நடவடிக்கை

சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை நடவடிக்கை

Karthikeyan S HT Tamil
Apr 28, 2022 03:52 PM IST

சென்னை: சென்னை, நந்தனம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

<p>சென்னை, நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் (Twitter)</p>
<p>சென்னை, நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் (Twitter)</p>

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டொயட்டோ ஷோரூம் முன் “யூ திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயட்டோ ஷோரூம் முன் “யூ திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.

பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டொயட்டோவுக்கு முன்னால் “யூ திருப்பம்” திரும்பி அவர்களின் இலக்கை அடை யலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் இது சம்மந்தமாக ஆலோசனைகள் இருப்பின் dcpsouth.traffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வைக்கலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.