Palani Temple: கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.. பழனியில் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Temple: கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.. பழனியில் பரபரப்பு!

Palani Temple: கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.. பழனியில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil
May 24, 2023 01:35 PM IST

Traders Protest In Palani: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவாரப் பகுதியில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனியில் வணிகர்கள் போராட்டம்
பழனியில் வணிகர்கள் போராட்டம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். இதுதவிர வார நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இதனால் உள்ளூர் பக்தர்கள் பெரும்பாலும் கூட்டம் இல்லாத நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

குறிப்பாக செவ்வாய்க்கு அதிபதியாக விளங்கும் முருகப் பெருமானை உள்ளூர் பக்தர்கள் செவ்வாய் கிழமைகளில் அதிகளவு வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று உள்ளூர் பக்தர்கள் பழனி மலைக்கோயிலுக்கு வந்தபோது கோயில் கண்காணிப்பாளர் சந்திர மோகன், அவர்களை தரக்குறைவாக பேசி சுவாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பழனி கோயில் கண்காணிப்பாளர் அவருக்கு உறுதுணையாக இருக்கும் இணை ஆணையர் நடராஜன் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அடிவாரம் சன்னதி வீதியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே வணிகர்கள் கோயில் தலைமை அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் சன்னதி வீதி, அடிவாரம் பகுதிகளில் கடை அடைக்கப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னெச்சரிக்கையாக திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அடிவாரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வணிகர்கள் கூறுகையில், கோயிலில் அனைவரும் சமம் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு இடையூறு செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.