Top 10 News : நாட்டிலேயே மிக உயர அம்பேத்கர் சிலை தெலங்கானாவில் திறப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : நாட்டிலேயே மிக உயர அம்பேத்கர் சிலை தெலங்கானாவில் திறப்பு

Top 10 News : நாட்டிலேயே மிக உயர அம்பேத்கர் சிலை தெலங்கானாவில் திறப்பு

Priyadarshini R HT Tamil
Apr 14, 2023 10:27 AM IST

Top 10 News : இன்றைய முக்கிய 10 செய்திகளை இங்கு டாப் 10 செய்திகளாக காணலாம்.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்ல தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு சால்வை அணித்து மரியாதை செய்யப்பட்டது.
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்ல தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு சால்வை அணித்து மரியாதை செய்யப்பட்டது.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்ல தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர். பி.ஆர்.அம்பேத்கரின் மிக உயரமான சிலை அவரது பிறந்த நாளில் திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டிலேயே மிக உயரமான சிலை என்று கூறப்படுகிறது. தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஹீசைன் சாகர் ஏரிக்கரையில் இதை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு

சென்னையில் 328வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்ற இந்து மடாதிபதிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள். சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 469 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இணைநோயுடன் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் உயிரிழந்தார். 273 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததாக சுகாதாரத்துறை அறிவித்தது.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை சுமார் 5 கி.மீ. நீளத்திற்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மிதிவண்டிப்பாதை, நடைபாதை ரூ.20 கோடியில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

சென்னையில் இயங்கும் மாநகரப்பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய அந்தந்த துறைகளுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த க்யூ.ஆர். பயணச்சீட்டு முறை மற்றும் பயணத்திட்டமிடலுக்கான செயலி, ரூ. 15 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையமாக அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். வரும் ஜீன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

க்ரைம்

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், சேலம் மாவட்ட மேட்டுப்பட்டி சோதனைச்சாவடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விளையாட்டு

ஐபிஎல் டி20 போட்டி 6 விக்கெட் வித்யாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. ஷீப்மன் கில் 49 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாஹா 30 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும் எடுத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.