Aadhaar Pan linking : கடைசி வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.. பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aadhaar Pan Linking : கடைசி வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.. பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்!

Aadhaar Pan linking : கடைசி வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.. பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்!

Divya Sekar HT Tamil
May 31, 2024 08:00 AM IST

Aadhaar Pan card linking : பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் இரண்டையும் இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடைசி வாய்ப்பு  பயன்படுத்தி கொள்ளுங்கள்.. பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்!
கடைசி வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.. பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாள்!

பொதுமக்கள் தங்களது பான் கார்ட் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்று மே 31ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

டிடிஎஸ் பிடித்தம் அதிகமாக இருக்கும்

அதிகளவு டிடிஎஸ் பிடித்தத்தைத் தவிர்க்க இன்றே பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இல்லை என்றால் டிடிஎஸ் பிடித்தம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில், "வருமான வரி செலுத்துவோர், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவும்.மே 31 ஆம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது, பிரிவு 206AA இன் கீழ் அதிக வரி விலக்கு/ வரி வசூலை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்பதை உறுதிசெய்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது

பான் கார்டை ஆதாருடன் இணைக்கத் தவறினால், வருமான வரிக் கணக்கு  தாக்கல் செய்யும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் பான் எண் செயல்படாததாகக் கருதப்படும். அப்படி இருக்கும் போது TDS/TCS பிடித்தம் இரண்டு மடங்காக இருக்கும்.

வருமான வரிச் சட்டத்தின் 139AA பிரிவின்படி, கடந்த ஜூலை 2017 முதல் பான் கார்டு பெற்ற அனைவரும் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்குள் இணைத்தவர்களுக்குப் பிரச்சினை இல்லை. இணைக்காதவர்களின் பான் கார்டு செயலற்றதாக மாறி இருக்கும். அவர்கள் கூடுதல் அபராத கட்டணத்துடன் ஆதாரை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

ஆன்லைனில் ஆதார் - பான் இணைப்பு

முதலில் e-filing portal தளத்திற்குச் சென்று, அங்கு இருக்கும் ‘Link Aadhaar Status’ என்பதை கிளிக் செய்யவும். அதில் பான் மற்றும் ஆதார் எண்களைப் பதிவிட்டு View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்யவும்.உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை இணைக்கப்படவில்லை என்றால்.இரண்டையும் இணைக்கும்படி ஒரு பாப் அப் வரும்.

அதை கிளிக் செய்து பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்கள் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற விவரங்களைப் பதிவிடவும்.உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க அங்கு இருக்கும் செக் பாக்ஸை கிளிக் செய்து ‘லிங்க் ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து அடுத்த பக்கத்தில் கேப்ட்சா கேட்கும். அதைப் பதிவிட்டால் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதைப் பதிவிடவும்.

இப்போது அபராதத்துடன் தான் ஆதாரை பான் கார்டு உடன் இணைக்க முடியும் என்பதால் ரூ. 1,000 அபராதத்தைச் செலுத்தி பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவும்.

இன்றே கடைசி நாள்

கடந்த ஜனவரி 29 வரை நாட்டில் உள்ள 11.48 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று மத்திய அரசே நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. எனவே, இரண்டையும் இணைக்காதவர்கள் இன்று இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்தி பான் கார்டை ஆதாருட் இணைத்துக் கொள்ளவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.