HBD Maraimalai Adigal தமிழறிஞர், ஆய்வாளர், தனித்தமிழ் இயக்க முன்னோடி மறைமலையடிகள் பிறந்த தினம் இன்று!
HBD Maramalai Adigal : இவரது குழந்தைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழி பெயர்களை திருஞான சம்பந்தம் – அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு, திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று தனித்தமிழ் மொழியில் மாற்றிவிட்டார்.
மறைமலையடிகள் புகழ்பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், தமிழையும், ஆங்கிலத்தையும், வடமொழியையும் நன்கு கற்றவர். தமிழை பிற மொழி கலப்பின்றி தூய நடையில் எழுதியவர். தனித்தமிழ் இயக்கத்தை துவங்கி, தமிழை செழுமையாக வளர்த்தவர்.
பரிதிமாற் கலைஞரும், மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இருபெரும் முன்னோடி தலைவர்கள். சைவ திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செய்து தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்றவர்.
மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை தமிழில் மறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்டார். 1876ம் ஆண்டு ஜீலை 15ம் தேதி திருக்கழுகுன்றத்தில் பிறந்தார். இவரது தந்தை சொக்கநாத பிள்ளை, தாய் சின்னம்மையார். தந்தை அறுவைசிகிச்சை நிபுணர்.
இந்த தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதையடுத்து இவர்கள் இருவரும் திருக்கழுகுன்றத்தில் உள்ள சிவன் வேதாச்சலத்தையும், அம்பாள் சொக்கம்மையையும் வேண்டி பெற்ற குழந்தையென்பதால் மலைமலையடிகளுக்கு வேதாச்சலம் என்ற பெயர் சூட்டினார்கள்.
இவரது குழந்தைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழி பெயர்களை திருஞான சம்பந்தம் – அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு, திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று தனித்தமிழ் மொழியில் மாற்றிவிட்டார்.
இவர் தந்தையின் மறைவையடுத்து பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், நாகையில் புத்தகக்கடை வைத்திருந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழ்பெற்ற சூளை சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
இவர் மீனலோச்னி என்ற செய்திதாள், சைவ சித்தாந்த தீபீகை ஆகிய செய்தி இதழ்களில் பணியாற்றினார். அவரது கனவே தமிழாசிரியராக வேண்டும் என்பதுதான், அதற்காக தன்னை தகுதிப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னர் ஞானசேகரம் என்ற இதழை 1902ம் ஆண்டு தொடங்கி நடத்தினார். பின்னர் அதன் பெயரை தனித்தமிழில் அறிவுக்கடல் என்று மாற்றினார். சென்னை கிறிஸ்த்தவ கல்லூரியில் அவரது லட்சியப்பணியான தமிழாசிரியர் பணி கிடைத்தது. 1905ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
பல ஆண்டு பேராசிரிய பணிக்கு பின்னர், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை 1912ம் ஆண்டு நிறுவினார். ராமலிங்க வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றி சங்கம் செயல்பட்டது. பின்னர் அதன் பெயரையும் பொது நிலைக்கழகம் என தமிழ்படுத்தினார். பல புத்தகங்களை திருமுருகன் அச்சு கூடத்தை ஏற்படுத்திவெளியிட்டார். இவர் பல்லாவரம் முனிவர் என்றும் அழைக்கப்பட்டார்.
தனது 75வது வயதில் 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்தார். இவரது தமிழ்தொண்டை பாராட்டி சென்னையில் உள்ள ஒரு பாலத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
டாபிக்ஸ்