Mahabalipuram : கிளம்புங்க மக்களே... பாரம்பரிய தினத்தில் ஒரு டிரிப் மாமல்லபுரத்தை ஃப்ரியா சுற்றி பாத்துட்டு வாங்க...
World Heritage day : உலக பாரம்பரிய சின்னங்களுக்கான தினத்தையொட்டி, மாமல்லபுரத்தில் இருக்கும் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய புராதன சின்னங்களை இன்று மக்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பாரம்பரியம் என்பது இசை, இலக்கியம், வாழ்கை நடைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதர்களுடைய கலாச்சாரங்கள் அனைத்தும் கலை பொருட்களிலும், நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றன. இதில் சமூக கட்டுப்பாடு, பண்புகள், மொழி மற்றும் கல்வி ஆகியவையும் அடங்கும். அவ்வாறு நமது பாரம்பரியம் போலவே உலக மக்களின் பலவகை பாரம்பரியங்களை பாதுகாத்து உலகில் நாகரீகம் வளர்வதற்காக கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இன்று உலக பாரம்பரிய தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோயில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள். யுனெஸ்கோ பாரம்பர்ய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டவை. நம் பெருமையையும், கலாசாரத்தையும் உலகுக்கு உணர்த்துகின்றன.
அங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் -
சாளுவன் குப்பம் புலிக்குகை, தமிழக குடைவரைக் கோயில்களில் வேறுபட்ட அமைப்பைக் கொண்டது. அதிரணசண்ட மண்டபம், கொற்றவை போரிடும் காட்சி, சாளுவன் குப்பம் முருகன் கோயில், அர்ச்சுனன் தபஸ், 90 அடி பாறையில் அமைந்திருக்கும் உன்னதமான கலைப்படைப்பு அர்ச்சுனன் தபஸ் என்ற பாறைச் சிற்பம். கிருஷ்ணன் மண்டபம், கோவர்த்தன மலையைத் தூக்கும் கண்ணன், குழலூதும் கண்ணன், முற்றுப்பெறாத அர்ச்சுனன் தபஸ், பஞ்சரதம், ஓலகனேஸ்வரர் கோயில், மகிஷாசுரமர்த்தினி குகை, கொற்றவை, அரக்கன் மகிஷாசுரனுடன் போரிடும் சிற்பம், அனந்தசயனப் பெருமாள் சிற்பம், ஆபத்தான கற்கோயில், ராமாநுஜ மண்டபம், ராயர் மண்டபம், ராயர் மண்டபக் கல் தூண், வராக மண்டபம், வராக மூர்த்தி, உலகளந்த பெருமாள், கொற்றவை சிற்பம், கணேச ரதம், கோனேரி மண்டபம், பிடாரி ரதம், கடற்கரைக் கோயில் என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது அங்கு சுற்றப்பார்பதற்கான இடங்கள்.
உலக பாரம்பரிய சின்னங்களுக்கான தினத்தையொட்டி, மாமல்லபுரத்தில் இருக்கும் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய புராதன சின்னங்களை இன்று மக்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் மாமல்லபுரத்தை இலவசமாக சுற்றிப்பார்த்து மகிழுங்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்