TNPSC: குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! அதிர்ச்சியில் மாணவர்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc: குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! அதிர்ச்சியில் மாணவர்கள்

TNPSC: குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! அதிர்ச்சியில் மாணவர்கள்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 25, 2023 09:30 AM IST

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள தரவரிசையில் முன்னணியில் உள்ளனர்

குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தரவரிசை பட்டியலில் குறைந்த ரேங்க் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது.

இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்ததால், டுவிட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாக்கினார்கள். மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாஜ டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கையில், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாட்களில் அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் Group-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி முடிவுகள் நேற்று மாலை வெளியானது. 

இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் குளறு படிகள் உள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தரவரிசை குறைந்த ரேங்க் வாங்கி உள்ளனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள தரவரிசையில் முன்னணியில் உள்ளனர் என புகார் தெரிவித்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்களிடையே கடும் அதிருப்தியை எற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அந்த முடிவுகளை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளுங்கள்.

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.