TN Wet Lands : தமிழகத்தின் ஈர நிலங்கள், ராம்சார் குறியீட்டு பகுதிகளை காக்கும் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Wet Lands : தமிழகத்தின் ஈர நிலங்கள், ராம்சார் குறியீட்டு பகுதிகளை காக்கும் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் என்ன?

TN Wet Lands : தமிழகத்தின் ஈர நிலங்கள், ராம்சார் குறியீட்டு பகுதிகளை காக்கும் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 20, 2023 07:00 AM IST

TN Wet Lands : தமிழகத்தில் ஈர நிலங்கள் மற்றும் ராம்சார் குறியீட்டு பகுதிகளை காக்கும் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசின் ஈர நிலங்களை காக்கும் திட்டங்களுக்கென ரூ. 14 கோடி நிதி ஒதுக்கி, 2 நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

அவை அண்ணா பல்கலைக்கழகம்

சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிறுவனம்.

அவற்றின் முக்கிய பணி-

தமிழகத்தின் 13 ராம்சார் குறியீட்டு இடங்கள் மற்றும்100 ஈர நிலங்களின் வளத்தை காக்க திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது.

ஈர நிலங்கள் மற்றும் ராம்சார் நிலங்களின், நீர் மற்றும் மண்ணின் தன்மை, ஏரிகளின் எல்லைகளை தெளிவாக வரையறுத்தல், ஆக்கிரமிப்புகளை தெளிவாக கண்டறிதல், அங்கு கழிவுநீர், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க திட்டங்கள் வகுத்தல் போன்றவை.

ஆனால், தமிழக ஏல ஒளிவுமறைவற்ற சட்டம், பிரிவு 16B(b)ன் படி, ஏலம் விடாமல் பணியை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குக் கொடுத்தால், அதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அவற்றை கடைபிடிக்காமல், பணிகளை அண்ணா பல்கலைக்கழகம், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையங்களுக்கு கொடுத்தது குறித்து தமிழக சட்டத்துறை கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈர நில திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மேற்கூறப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் நோக்கத்திலேயே, ஏல விதிமுறைகள் மீறப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூழல் பாதுகாப்பை மனதில்கொண்டு, ஈர நிலங்கள் மற்றும் ராம்சார் நிலங்களை பாதுகாக்கும் பணிகள் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதில் எழும் சந்தேகங்கள் என்னவென்றால்,

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதும், ராம்சார் குறியீடு பெற்ற இடத்திலேயே நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்ட விரோத பட்டாக்கள் கொடுப்பதும் செய்திகளில் வெளியாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமையைவிருக்கும் பகுதியில் 2,605 ஏக்கர் ஈர நிலங்களாக இருப்பதும், உள்ளூரில் 13 பஞ்சாயத்துகள் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், அரசு அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் (உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஈர நிலங்களை அரசு காப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிப்பது பொய்தானா?) ஈர நிலங்களை காக்காமல், விமான நிலையம் அமைப்பதில் மட்டும் முனைப்பு காட்டுவது எப்படி சரியாகும்?

அரசு ஈர நிலங்களை காக்க மக்கள் கொடுக்கும் அழுத்தம் மட்டுமே பலன் கொடுக்கும் என மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.