Job Alert: தேர்வு இல்லாம அரசுத்துறையில் வேலையா?வெளியான சூப்பர் அறிவிப்பு
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் வகையில், ஒரு பணியிட நிரவல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பணியிட அறிவிப்பு (Pixabay)
சென்னை:தமிழ்நாடு சுகாதாரத்துறை அவ்வப்போது தமக்குத் தேவைப்படும் பணியாளர்களை நேரடியாக தேர்வு இல்லாமல் நேர்காணல் நடத்தி தேர்ந்தெடுத்து வருகிறது. இதற்கான அறிவிக்கைகள் www.tnhealth.tn.gov.in இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு என்னவென்றால், ஒரு தற்காலிகப் பணிக்கு உண்டான அறிவிப்பு ஆகும். அது, தமிழ்நாட்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவில் வெற்றிடமாகவுள்ள Assistant Research Officer (Pharmacology &Toxicology) பணியிடத்தை நிரப்புவது பற்றிய அறிவிப்பைப் பற்றியதாகும்.
தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.20,000 தரப்படும் என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பாட்டுள்ளது.
