தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanavu Illam Scheme: 'கனவு இல்லம்' திட்டத்தில் 10 எழுத்தாளர்களுக்கு வீடு

kanavu illam scheme: 'கனவு இல்லம்' திட்டத்தில் 10 எழுத்தாளர்களுக்கு வீடு

Karthikeyan S HT Tamil
Nov 22, 2022 09:58 PM IST

சென்னை: 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மதுரை எம்பி சு.வெங்கடேசன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு, எழுத்தாளர்கள் இமையம், ஈரோடு தமிழன்பன், புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகனராசு ஆகிய 6 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை ஏற்கனவே வழங்கியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, 2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 

  1. 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி. திலகவதி
  2. 2011 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன். கோதண்டராமன்
  3. 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் 
  4. 2013 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ப. மருதநாயகம் 
  5. 2015 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற மறைமலை இலக்குவனார்
  6. 2015-16 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன்
  7. 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ். இராமகிருஷ்ணன்
  8.  2016 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா. ராஜன்
  9.  2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி. குருஸ்
  10.  2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 16.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த பத்து எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்." என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.