TN CM Stalin: சூப்பா் திட்டத்தோடு வெளிநாடு செல்லும் முதல்வா் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றது.
பிரமாண்டமாக நடந்து முடிந்த இந்த மாநாட்டில், இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்றும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இந்த மாநாடு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 28 ஆம் தேதி, 15 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவாி 28 ஆம் தேதி ஸ்பெயின் பயணம் மேற்கொள்ளும் அவர், அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் முதல்வர் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
600-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளதாகவும் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் வளா்ச்சி அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளாா். திட்டமிட்டதை விட அதிக முதலீடு ஈட்டப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் தென் மாவட்டங்கள் தொழில் வளா்ச்சி பெறும் எனவும் அவர் தொிவித்துள்ளாா்.
மேலும், அவா் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு வழிகளை முதலமைச்சா் வகுத்துத் தந்துள்ளார். தமிழகத்தின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி பரவலாக இருக்கும்.
தமிழககத்தில் மேலும் பல முன்னணி தொழிற்சாலைகள் வருவதற்கு இந்த மாநாடு வழிகோலியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பேட்டரி உற்பத்தி போன்றவற்றின் மூலம் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் தொழில்துறையினர் லாவோஸ் செல்ல உள்ளனா்.வரும் 28ஆம் தேதி எங்களுடன் முதலமைச்சா் ஸ்பெயினுக்கு வரவுள்ளார். பின்னர் அமெரிக்கா, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம்." என்றார்.
டாபிக்ஸ்