தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Assembly Secretary Sent Letter To Ec Regarding Vilavancode Constituency Vaccancy

Vilavancode: விளவங்கோடு தொகுதி காலி.. லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல்?

Karthikeyan S HT Tamil
Feb 26, 2024 06:54 PM IST

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டமன்ற செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து, விஜயதாரணி கட்சி மாறிய காரணத்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவரை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கிடையில், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்தார். இந்த நிலையில், விஜயதாரணியின் ராஜினாமாவை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி உள்ளார். இதனால், வரும் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்