TN Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!

TN Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!

Kathiravan V HT Tamil
Jun 29, 2024 01:49 PM IST

TN Assembly 2024 Live: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் உள்ள புளியகுளம் விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

TN Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!
TN Assembly 2024: ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் கேட்ட வானதி! சேகர்பாபு சொன்ன நச் பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது. 

மானியக் கோரிக்கை விவாதம்

இன்றைய தினம், காவல், உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகின்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். 

வானதி சீனிவாசன் கேள்வி

இன்றைய கேள்வி நேர விவாதத்தின்போது, பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், எனது தொகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு தங்கத் தேர் அறிவித்து உள்ளனர். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் உள்ள புளியகுளம் விநாயகர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 8762 திருக்கோயில்களூக்கு மாநிலக் குழு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள சட்டம்னறத் தொகுதிகளை ஒப்பிடுகையில், 42 கோடி அளவுக்கு கோவை தெற்கு தொகுதியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. கேளாமல் கொடுக்கும் இந்த அரசு, கேட்டதெல்லாம் கொடுக்கும் நம்முடைய முதலமைச்சர், வானதி சீனிவாசன் அவர்களின் கோரிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவேற்றப்பட்டு செய்துத்தரப்படும் என தெரிவித்து உள்ளார். 

பிற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு

முன்னதாக கேள்வி ஒன்றுக்கு  பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, முசிறி கைலாசநாதர் கோயிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டாயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு என்ற இலக்கில், இந்த கோயிலும் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கோயிலுக்கு குடமுக்கு நடத்தப்படும் என்றார்.

மேலும், பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்ட அரசு முன்வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 100 ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு தொல்லியல் துறை அனுமதிக்கு பின் வரைபடம், மாநிலக்குழு, மண்டலக்குழு ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் உபயதாரர் நிதியை ஏற்பாடு செய்தால், தியாகராஜ சுவாமி கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெறும் என்று கூறினார்.  

கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை கேட்ட எம்.எல்.ஏ

பின்னர் கேள்வி எழுப்பிய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டு நகராட்சியில் உள்ள பத்தரகாளி அம்மன் கோயில் கோயிலில் தூக்கத் திருவிழா நிறைவுநாள் விழாவுக்கு உள்ளூர் விடுமுறை வழங்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் மூலம் கருத்துரு வரப்பெற்றால் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.