சிவகளை அகழாய்வு பணிகளில் தங்கம் சார்ந்த பொருள் கண்டுபிடிப்பு!
சிவகளை பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணியில் தங்கம் சார்ந்த பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் துறை அலுவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
<p>சிவகளை அகழாய்வின்போது கண்டறியப்பட்ட பொருள்கள்</p>
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளை பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்டமாக நடைபெற்ற பணிகளின்போது தங்கம் சார்ந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பராக்கிரமபாண்டி திரட்டில் முதுமக்கள் வாழ்விட பகுதிகள் கண்டறியும் அகழாய்வு பணிகளில் காணப்பட்ட இந்த தங்கப்பொருளை தொல்லியல் துறை அலுவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவகளையில் தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளில் 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல் பழங்கால கல்வட்டங்கள் உள்பட ஏராளமான பொருள்கள் கிடைத்துள்ளன.
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.