Thoothukudi: காவல் நிலைய துப்புரவு பணி செய்த 68 வயது மூதாட்டிக்கு பாலியல் சித்தரவதை.. தலைமை காவலர் அதிரடி சஸ்பெண்ட்
காவல் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் 68 வயது பெண் கையில் இருந்த கை பேக் பிடுங்கி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக சித்தரவதை செய்த தலைமை காவலர் செல்வகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி இரவு தலைமை காவலர் செல்வகுமார் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் காவல் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் 68 வயது பெண் கையில் இருந்த கை பேக் பிடுங்கி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்துக்கு வந்த உதவி ஆய்வாளர் முருக பெருமாளிடம் கண்ணீர் சிந்தியபடியே புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் செல்வக்குமார் பொதுவாக தினமும் பணியின் போது மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து. 68 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வ குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
தூத்துக்குடியில் தலைமை காவலர் 68 வயது பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் காவல் நிலையத்திற்கு உள்ளேயே இதுபோன்ற பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்