Krishnagiri: கிருஷ்ணகிரி அருகே ஊரையே காலி செய்து வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள்!
21 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் கிராமத்தில் துரதிஷ்ட வசமாக அதிக அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் பேய், காத்து கருப்பு போன்ற தீயசக்திகள் புகுந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே தொடர் மரணங்கள் ஏற்பட்டதால் ஊரை காலி செய்த கிராம மக்கள் வனப்பகுதியில் குடியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி, ஊரை காலி செய்து, வனப்பகுதிக்கு குடியேறி, ஊரில் புகுந்துள்ள காத்து கருப்பை விரட்ட முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர்.
அதே போல் ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்க்காக நிறுத்தி வைத்தனர். தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற அவர்கள், நாள் முழுவதும் அங்கேயே தங்கி, வன தேவதைகளை வழிபட்டு, சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின், மண்டு மாரியம்மன், முத்துமாரியம்மன், செல்லிமாரியம்மன் ஆகிய கிராம தெய்வகங்களை கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர். '
பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும், ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன், தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்குள் சென்றனர்.
இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் கிராமத்தில் துரதிஷ்ட வசமாக அதிக அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் பேய், காத்து கருப்பு போன்ற தீயசக்திகள் புகுந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
இதனால் தான் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதி, அந்த தீய சக்திகளை விரட்ட நாங்கள்மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளையும் அழைத்து கொண்டு ஊரை காலி செய்து வனப்பகுதியில் குடியேறினோம். ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு மாலை வீடு திரும்பி உள்ளோம் என்று அந்த மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்