Ooty Hill Rail: விலகி சென்ற சக்கரங்கள்! ஊட்டி மலை ரயிலுக்கு இந்த நிலையா? மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்-the ooty hill railway derailed and the wheel broke down - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ooty Hill Rail: விலகி சென்ற சக்கரங்கள்! ஊட்டி மலை ரயிலுக்கு இந்த நிலையா? மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

Ooty Hill Rail: விலகி சென்ற சக்கரங்கள்! ஊட்டி மலை ரயிலுக்கு இந்த நிலையா? மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

Kathiravan V HT Tamil
Jun 08, 2023 07:17 PM IST

”ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கடைசி பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழ் இறங்கியது பயணிகள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பித்தனர்”

உதகை மலை ரயில் தண்டவாளத்தில் இருந்து சக்கரங்கள் விலகிய நிலையில் பழுதை சரி செய்யும் ஊழியர்கள்
உதகை மலை ரயில் தண்டவாளத்தில் இருந்து சக்கரங்கள் விலகிய நிலையில் பழுதை சரி செய்யும் ஊழியர்கள்

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மதியம் 2 மணி அளவில் மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலை ரயில் புறப்பட்டது குன்னூர் வந்தடைந்ததும் 3.30 மணி அளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல இருந்தது,

இந்நிலையில் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மொத்தம் 174 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் செல்ல புறப்பட்டபோது ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கடைசி பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழ் இறங்கியது பயணிகள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பித்தனர்.

பேருந்துகளில் ஏற்றி அனுப்பப்படும் ரயில் பயணிகள்
பேருந்துகளில் ஏற்றி அனுப்பப்படும் ரயில் பயணிகள்

இதனால் இரண்டு மணி நேரம் ஆகியும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் அமர்த்த முடியாததால் பயணிகளை ரயில்வே நிர்வாகம் அரசு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தது பின்பு பொக்லைன் உதவியுடன் ரயில் பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றினர்.

ஊட்டி மலை ரயில் வரலாறு 

நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854 ஆம் ஆண்டு ஊட்டி மலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. 

ஆனால் மலைப்பகுதி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி 1909ஆம் ஆண்டு முழுமையாக நடைமுறைக்கு வந்தது.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க  மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள ரயில் பாதை, ரயில் நிலைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பாரம்பரிய கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஊட்டி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கலாம் என்று யுனெஸ்கோவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தப் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக கடந்த 2005ஆம் அறிவித்தது. உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.