Suicide : ’அரசு பள்ளியில் சேர்த்து விடுங்க அம்மா’ மறுப்பு தெரிவித்த பெற்றோர்.. 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!
தோழிகளுடன் அரசு பள்ளியில் படிக்க விரும்பிய மாணவி பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 17 வயதில் சத்தியா என்ற மகள் இருந்தார். இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவருடைய தோழிகள் அனைவரும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே தன்னையும் அரசு பள்ளியில் சேர்த்து விடுமாறு பெற்றோரிடம் சத்தியா கேட்டுள்ளார். ஆனால் சத்தியாவின் பெற்றோர் இதற்கு மறுத்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் சத்தியா இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சத்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் போலீசார் சத்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்தியா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோழிகளுடன் அரசு பள்ளியில் படிக்க விரும்பிய சத்தியா பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்