திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பயங்கர விபத்து! இதுவரை உயிரிழப்பு இல்லை! மீட்பு பணிகள் தீவிரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பயங்கர விபத்து! இதுவரை உயிரிழப்பு இல்லை! மீட்பு பணிகள் தீவிரம்!

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பயங்கர விபத்து! இதுவரை உயிரிழப்பு இல்லை! மீட்பு பணிகள் தீவிரம்!

Kathiravan V HT Tamil
Oct 12, 2024 12:19 AM IST

திருவள்ளூர் கவரைப் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. தீப்பற்றி 3பெட்டிகள் எரிந்த நிலையில் 2 பெட்டிகள் மேலே ஏறி நிற்கிறது. லூப்பில் நின்ற சரக்கு ரயில் மீது சென்னையில் இருந்து பிகார் மாநிலம் தர்ப்பங்கா செல்லும் விரைவு ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பயங்கர விபத்து!
திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பயங்கர விபத்து!

மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 044 25354151, 044 24354995 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி எண்கள் மூலம் தகவல் பெறலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறி உள்ளார்.

நடந்தது என்ன?

வண்டி எண் 12578 பொன்னேரியை இரவு 9.27 மணிக்கு கடந்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ரயில் பயணிகள் பயங்கர சத்தத்துடன் கூடிய மோதலை அனுபவித்தனர். மேலும் ரயில் லூப் லைனில் நுழைந்து சரக்கு ரயிலுடன் மோதியது.இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

குறைந்தது 12 முதல் 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக தென்மேற்கு ரயில்வே சிபிஆர்ஓ தெரிவித்துள்ளது. இந்த மோதலின் போது ரையில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தீயணைப்பு படையினர் அணைத்தனர். மொத்தம் 12-13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக இரண்டு இருப்புபாதை மார்க்கத்திலும் ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ட்வீட்

இந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் ஆவடி நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.என தெரிவித்து உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.