Weather Update: மக்களே உஷார்.. 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் 2-3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13.04.2023 முதல் 16.04.2023 வரை
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17.04.2023
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
13.04.2023 மற்றும் 14.04.2023
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்