Metro rail: தமிழக முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை: ஆயத்த பணி தொடக்கம்
தமிழ்நாட்டில் சென்னை தவிர மேலும் சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கு மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் திட்டமிட்டுள்ளது.
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இங்கு மெட்ரோ சேவையை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவை, மதுரை, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயிலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் 15லிருந்து 20 கி.மீ., வரை இந்த ரயில்களை இயக்க வேண்டும்; அதுவும் 2024ல் இது நடைபெற வேண்டும் என ஒன்றிய அரசும், தமிழக அரசும் விரும்புகின்றன.
இதற்காக ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் தமிழகம் வந்து ஆலோசனை நடத்துவராம். இது குறித்து தமிழக முதல்வரும், பிரதமர் மோடியை சந்திப்பார் என சொல்லப்படுகிறது. பின் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்கின்றனர்.
இந்த தமிழக நகரங்களில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டால், உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் தான் அதிக நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என்று மெட்ரோ ரயில் கார்ப்பொரேஷன் அதிகாரிகள் கூறுகின்றனர்.