HBD GK Moopanar: மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்..பிரதமராக ஆகியிருக்க வேண்டியவர்..ஜி.கே. மூப்பனார் எனும் ஆளுமை!
HBD GK Moopanar: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவராக திகழ்ந்த மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 93-வது பிறந்தநாள் இன்று. இந்நாளில் அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ..!
1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும் பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.கே.மூப்பனார். கருப்பையா என்பது தான் அவரது இயர் பெயர் என்றாலும் பெயர் சொல்லி அழைப்பதை தவிர்ப்பதற்காக கிராமத்தினர் மூப்பனார் என்று அழைக்கத் தொடங்கி அதுவே பின்னாட்களில் ஜிகே மூப்பனார் என்று ஆகிவிட்டது.
பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இளம் வயதில் இருந்தே காங்கிரஸ் இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்த மூப்பனார், 1951-ல் காமராஜரை சந்தித்த பின் முழு நேர காங்கிரஸ் தொண்டராக உருவெடுத்தார். அதன் பிறகு 1965-ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது காமராஜர் அணியில் இணைந்தார் மூப்பனார். காமராஜரின் மறைவுக்கு பிறகு 1976-ல் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் அணிகள் ஒன்றுபட்ட பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிரதமராகும் வாய்ப்பு
அயராது கட்சி பணியாற்றியதால் பதவிகள் அவரை தேடி வந்தன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் என பல பொறுப்புகளை வகித்த அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த காமராஜருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை இந்திரா காந்திக்கு கொடுத்துவிட்டார். அதேபோல், மற்றொரு தமிழரான ஜி.கே.மூப்பனாருக்கும் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவிய மூப்பனார்
கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான பி.வி. நரசிம்ம ராவ் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இதற்கு ஜி.கே. மூப்பனார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இறுதியில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி 'வளமான தமிழகம்..வலிமையான பாரதம்' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார்.
ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ்
கட்சித் தொடங்கிய உடனே தேர்தலைச் சந்தித்த த.மா.க., 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. அத்தோடு சட்டமன்ற தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 இடங்களில் வென்றது. இந்த வெற்றிக்கு, திமுக - தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸும் முக்கிய பங்காக இருந்தது. தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய ஜி.கே.மூப்பனார் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19)..!
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்