Toll Free: வாகனங்களை பழுது பார்க்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வெளியீடு!
மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை சரிசெய்ய அரசு தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் 8 டிச., 2023 வெள்ளிக்கிழமை மிக்ஜாம் புயலுக்குப் பிறகு பெய்த கனமழையால் காமாட்சி அம்மன் நகர் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள நீரில் தத்தளித்தனர். (PTI)
மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு 1800 2100 007 என்ற எண்ணும்; யமஹா வண்டிக்கு 1800 4201 600 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டிவிஎஸ் வாகனத்துக்கு 1800 2587 555 என்ற எண்ணும்; ஹோண்டா வாகனத்துக்கு 1800 1033 434 என்ற எண்ணும்; சுசுகி வாகனத்துக்கு 1800 1033 434 என்ற எண்ணும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாருதி சுசுகி வாகனத்துக்குப் பழுது பார்க்க 1800 1800 180 என்ற எண்ணும்; லன்சன் டொயோட்டோ வாகனத்துக்குப் பழுது பார்க்க 1800 1020 909 என்ற எண்ணும்; 1800 2090 909 என்ற எண்ணும் பழுது பார்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
