இரும்பு கடைகளில் இலவச சைக்கிள்கள்! வெளியான அதிர்ச்சி செய்தி! அரசு சொல்லும் பதில் இதுதான்!
இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது என தமிழ்நாடு அரசு விளக்கம்

இரும்பு கடைகளில் இலவச சைக்கிள்கள்! வெளியான அதிர்ச்சி செய்தி! அரசு சொல்லும் பதில் இதுதான்!
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மிதிவண்டிகள் தரமற்று உள்ளதாக எழுந்த புகாருக்கு அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிள்கள் தரமற்று உள்ளதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இது குறித்து ட்வீட் செய்து இருந்தார். அதில், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்
இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?