ரூ.1000 பொங்கல் பாிசு.. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்!-tamil nadu cm announces rs 1000 as pongal gift to all ration card holders - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரூ.1000 பொங்கல் பாிசு.. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்!

ரூ.1000 பொங்கல் பாிசு.. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Jan 09, 2024 02:20 PM IST

Pongal Gift 2024: பலருக்கும் பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். 

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரர்களிடம் டோக்கன் விநியோகம் செய்து வருகிறாா்கள்.

இந்த நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளாா். அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, அரிசி மற்றும் பொருளில்லா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குவதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தொிவித்துள்ளது.

முன்னதாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.