தமிழக பட்ஜெட் 2022-23: செய்திகள் உடனுக்குடன் ! LIVE
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழக பட்ஜெட் 2022-23: செய்திகள் உடனுக்குடன் ! Live

தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்

தமிழக பட்ஜெட் 2022-23: செய்திகள் உடனுக்குடன் ! LIVE

06:48 AM ISTMar 18, 2022 02:30 PM Karthikeyan S
  • Share on Facebook
06:48 AM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

Fri, 18 Mar 202205:44 AM IST

மருத்துவ காப்பீடு திட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1540 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:44 AM IST

தமிழ்மொழிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

தமிழ் மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:44 AM IST

இலவச மிதிவண்டி திட்டம்

மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 1062 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:44 AM IST

ஸ்மார்ட் கிளாஸ் ரூம்

திறன்மிகு வகுப்பறைகள் எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:44 AM IST

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்- நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:44 AM IST

நகைக்கடன் தள்ளுபடி

  • வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

Fri, 18 Mar 202205:44 AM IST

ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடல் திட்டம்

தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடல் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:28 AM IST

நான் முதல்வன் திட்டம்

  • ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
  • தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

Fri, 18 Mar 202205:26 AM IST

இலக்கிய திருவிழாக்கள்

ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ. 5.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202205:24 AM IST

பேராசிரியர் அன்பழகன் திட்டம்

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

Fri, 18 Mar 202205:21 AM IST

நீர்நிலை பாதுகாப்பு

நீர்நிலை பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Fri, 18 Mar 202205:15 AM IST

வெள்ள பாதிப்பு

சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்காக இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

Fri, 18 Mar 202205:21 AM IST

அருங்காட்சியகம்

  • வானிலை ஆய்வு மையத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
  • விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

Fri, 18 Mar 202205:10 AM IST

ரூ.50 கோடி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Fri, 18 Mar 202205:00 AM IST

ரஷ்யா - உக்ரைன் போர்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக உலகளவில் பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்பு உள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Fri, 18 Mar 202205:00 AM IST

கூட்டாட்சி தத்துவம்

  • தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது
  • கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது - நிதியமைச்சர்

Fri, 18 Mar 202204:59 AM IST

அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்திற்கு கொடுத்த மானியம் அகவிலைப்படி உயர்வின் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும் - பழனிவேல் தியாகராஜன்

Fri, 18 Mar 202204:53 AM IST

அதிமுக வெளிநடப்பு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Fri, 18 Mar 202204:47 AM IST

காகிதமில்லா தமிழக பட்ஜெட்

  • தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
  • 2022 -2023 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Fri, 18 Mar 202204:38 AM IST

திமுக அரசின் முதல் முழு பட்ஜெட்

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் முறையாக மாநிலத்தின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

Fri, 18 Mar 202204:33 AM IST

பட்ஜெட் -2022-2023

தமிழக அரசின்2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

Fri, 18 Mar 202204:26 AM IST

பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக சட்டப்பேரவையின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது.

Whats_app_banner