Govt Arts and Science College: மாணவர்களே! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை! கால அட்டவணை விவரங்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Govt Arts And Science College: மாணவர்களே! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை! கால அட்டவணை விவரங்கள் என்ன?

Govt Arts and Science College: மாணவர்களே! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை! கால அட்டவணை விவரங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
May 06, 2023 11:50 AM IST

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அட்டவனையை அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதைப்பின்பற்றி விண்ணபிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன.

இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/  எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின், மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரிகள் அளவில்) மே 25 முதல் 29ம் தேதி வரை நடத்தப்படும்.

இதையடுத்து முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரையும், 2ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20ம் தேதி வரையும் நடைபெறும். கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.50, பட்டியலின பிரிவினருக்கு ரூ.2 என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

நடப்பாண்டு முதல் மாணவர்கள் ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.50-ம், பட்டியலின பிரிவினர் ரூ.2-ம் செலுத்தினால் போதுமானது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூகவலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான்டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.