Suicide : 10ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு எமனான தந்தையின் குடிப்பழக்கம் – கடிதத்தில் உருக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suicide : 10ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு எமனான தந்தையின் குடிப்பழக்கம் – கடிதத்தில் உருக்கம்

Suicide : 10ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு எமனான தந்தையின் குடிப்பழக்கம் – கடிதத்தில் உருக்கம்

Priyadarshini R HT Tamil
Published Jun 04, 2023 09:47 AM IST

Student Suicide : தந்தையின் குடிப்பழக்கத்தால் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி
தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

பிரகாஷ் 12ம் வகுப்பு முடித்துள்ளார். விஷ்ணுபிரியா தற்போது நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் 410 பெற்றிருந்தார். பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறுசெய்வதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இரவு என்றாலே வீட்டில் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பிரபு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.

பிரகாஷ் வெளியே சென்றிருந்தார். கற்பகம் 100 நாள் வேலைக்கு சென்றிருந்தார்.

மதியம் வீட்டிற்கு கற்பகம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்டு கொண்ட நிலையில் விஷ்ணுபிரியா இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஷ்ணுபிரியாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தசம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வீட்டில் பார்த்தபோது விஷ்ணு பிரியா எழுதிய உருக்கமான கடிதம் இருந்தது.

அதில், ‘என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்’ என எழுதி இருந்தார்.

தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.