Crime : இந்த முடிவு யாரும் எடுக்காதீங்க.. தேர்வில் தோல்வி.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள்.. சோகத்தில் பெற்றோர்!
ஆவடி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி பயத்தில் இரு மாணவர்கள் தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி, ஏப். 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அத்துடன் பிளஸ் 2 தேர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த தேர்வில் 47,934 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அருகே பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவர் தற்கொலை கொண்டார். பிளஸ் 2 மாணவர் ஹரி என்பவர் வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல ஆவடியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆவடி கோவர்தனகிரி பகுதியை சேர்ந்த கனகராஜ் எனவரது மகன் தேவா(16) 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு இன்று ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன், இரண்டு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேவா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை கைப்பற்றிய ஆவடி போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜுன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Tamil Latest News Updates இன்று (19-02-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்