திருச்சியில் சோகம்..காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி..அதிர்ச்சியில் சக மாணவர்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திருச்சியில் சோகம்..காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி..அதிர்ச்சியில் சக மாணவர்கள்

திருச்சியில் சோகம்..காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி..அதிர்ச்சியில் சக மாணவர்கள்

Divya Sekar HT Tamil
Feb 25, 2023 08:34 PM IST

Trichy Student death : திருச்சியில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்க்க சென்ற இடத்தில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
.காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

மேலும் தற்போது காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து இருப்பதால் குளிப்பதற்கு திட்டமிட்ட மாணவர்கள் ஒன்றாக காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக கௌதம் என்கிற மாணவன் ஆழமான பகுதியில் சிக்கினார்.

அப்போது செய்வதறியாது திகைத்த சக மாணவர்கள் கௌதமை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதனை அடுத்து கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது நீரில் மூழ்கி கௌதமன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்க்க சென்ற இடத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.