Dharmapuri: சிறுமியை வயல்வெளிக்குத் தூக்கிச் சென்ற முதியவர்கள் - திடீர் ரத்தப்போக்கு - தெருக்கூத்து கலைஞர்கள் கைது!
சிறுமியை வயல்வெளிக்கு தூக்கிச்சொன்று பாலியல் வன்கொடுமை செய்த தெருக்கூத்து கலைஞர்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது.
சமீபமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு பல்வேறு விதமான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
தினசரி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. சட்டமும் அதற்கு ஏற்ற நடவடிக்கையை எடுத்துக் கொண்டே இருக்கின்றது. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் பெற்றாலும் குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் மூன்று பேர் ஒரு சிறுமியை வயல்வெளிக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அருகே தனது தந்தையுடன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தந்தை வேலைக்குச் சென்ற காரணத்தினால் வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று அந்த கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. மழை வர வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து அர்ஜூனன் தபசு என்ற தெருக்கூத்தை நடத்தியுள்ளனர். கிராம மக்கள் அனைவரும் அப்போது தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இரண்டு தெருக்கூத்து கலைஞர்களான 63 வயது கொல்லாபுரி, 60 வயது மணிகண்டன் ஆகியோரும், 34 வயதான மஞ்சுநாதன் ஆகிய மூன்று பேரும் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக அந்த பகுதியில் உள்ள வயல்வெளிக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
பின்னர் மூன்று பேரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னைக் கொலை செய்து விடுவோம் எனக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமிக்கு ஐந்து நாட்கள் கழித்து அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான சிறுமி அவரது உறவினர்களிடம் தனது உடல்நிலை குறித்துத் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, மூன்று பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உண்மையைக் கூறியுள்ளார்.
இது குறித்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தெருக்கூத்து கலைஞர்களான மணிகண்டன், கொல்லாபுரி மற்றும் மஞ்சுநாதன் உள்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பள்ளி மாணவியான 14 வயது சிறுமியை வயல்வெளிக்குத் தூக்கிச் சென்று மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்